புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

அழுத்தங்கள் வந்தாலும் செப்டெம்பரில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்: மனித உரிமைகள் ஆணையாளர்

எத்தகைய அழுத்தங்கள் தரப்பட்டாலும் தாம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியிடப்போவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
ஜெனீவாவில் அரசசார்பற்ற அமைப்புக்களுடன் இடம்பெற்ற மூடிய அறை சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையானது, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் கேட்ட கேள்வி ஒன்றுக்கே செய்ட் ராட் ஹூசைன் இந்த பதிலை வழங்கினார்.
ஏற்கனவே மார்ச் மாதத்தில் வெளியிடப்படவிருந்த இந்த அறிக்கையை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைகையின் அடிப்படையில், மேற்கத்தைய நாடுகளின் அழுத்தங்களின் கீழ் பிற்போடப்பட்டமை குறிப்பிட்டது

ad

ad