புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

தொடர் தோல்வி... ஆப்கானையும் அழைத்து சென்றது இங்கிலாந்து!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தினாலும், இரண்டு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேறியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 36.2 ஓவராக ஆட்டம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஷிப்புல்லா 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 111 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
 
இதையடுத்து, டக்வொர்த் விதியின்படி 25 ஓவரில் 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் ஹாலஸ் 37 ரன்னில் ஆட்டம் இழக்க, பின்னர் வந்த டெய்லர், பெல்லுடன் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 18.1 ஓவரில் 1 விக்கெட் இழந்து 101 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெல் 52 ரன்னும், டெய்லர் 8 ரன்னும் எடுத்தனர். 

ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்வியுடனும், ஆப்கானிஸ்தான் அணி 1 வெற்றி, 5 தோல்விகளுடன் வெளியேறியது

ad

ad