புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

சுவிஸ்-புங்குடுதீவு “சிவநெறிச் செல்வர்“ திரு.சுப்பையா வடிவேல் அவர்களின் ”தேவாரங்களும் திருவாசகமும்” இறுவட்டு வெளியீடு!

Vadivelu2














ப்த தீவுகளில் சிறப்பானதும் சைவத்தையும் தமிழையும் வளர்த்ததில் முன்னின்றதுமான புங்கையூரில் 10 ஆம் வட்டாரத்தில் பிறந்த திரு.சுப்பையா வடிவேல் அவர்கள் நீண்டகாலமாக ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்

அந்தவகையில் இன்றை இளஞ்சமூகத்தினருக்கு ஆன்மீக விடயங்களை ஊட்டும் நோக்குடன் சுவிஸ் நாட்டின் தலைநகராம் தூணில் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தை அமைத்து கடந்த 15 வருடங்களாக அதற்குத் தலைமைதாங்கி நடாத்திவருகிறார்.
இவர் இதுவரை தான் ஆற்றிய ஆன்மீகப்பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் என்றும் விளம்பரப்படுத்தியதில்லை. இவருக்கு இலங்கையிலும் தற்போது அவர்வாழும் சுவிற்சர்லாந்திலும் இன்னும் பல நாடுகளிலும் பல்வேறு பட்டங்கள், சிறப்புகள் வழங்கிக் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள். எனினும் அவர் அவற்றை பிரபலப்படுத்தியதில்லை. அவர்பெற்ற பட்டங்களை இவ்விடத்தில் ஒருதரம் மீட்டிப் பார்ப்பது பொருத்தமானதாகவிருக்கும்.
திரு.சுப்பையா வடிவேல் அவர்களின் தமிழ் சேவைக்கும் அவரின் சைவஆன்மீக சேவைளை பாராட்டி அவருக்கு 2009 ஆண்டு சிவத்தமிழ்செல்வர் கௌரவம்  “பிரஸ்டாபூசணம்“ சிவஸ்ரீ பா. சித்திராங்கக்குருக்கள்(கொழும்பு) “சிவாகமகானபூசணம் சிவஸ்ரீ கு.லம்போதரக்குருக்கள் (லண்டன்) “ஈசானசிவம் சிவஸ்ரீ இ.சிவசண்முகநாதக்குருக்கள் (சுவிஸ்) “சிவாகமரத்தினம்“ சிவஸ்ரீ பே. துளதீஸ்வரக்குருக்கள் (சுவிஸ்) “ஞானவித்தகர்“ பிரமஸ்ரீ து. சுப்பிரமணியசர்மா(சுவிஸ்) “சிவபூசணம்“ சிவஸ்ரீ சி. பிரபாகரக்குருக்கள்(சுவிஸ்) ஆகிய சிவாச்சாரியர்களால் வழங்கப்பட்து.
09.11.2012 ரொறன்டோ-கனடா தமிழ் மக்களாலும் ஸ்ரீ வரத்தி விநாயகர் தேவஸ்தான ஸ்தாபகரும் “சிவாச்சாரியகலாநிதி““சிவாச்சார்ய குலபூசணம்“ சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமாரக்குருக்கள்(ஜயாமணிசிவம்) அவர்களாலும் “சிவநெறிச் செல்வர்“ என்னும் பாராட்டு கௌரவ விருதும் வழங்கப்பட்டது.
இவ்வாறு தனது 60 வது அகவையை நெருங்கிநிற்கும் திரு.சுப்பையா வடிவேல்அவர்கள் ”தேவாரங்களும் திருவாசகமும்” எனும் இறுவட்டை ஆக்கியுள்ளார் மேலும் அதன் விற்பனையால் வரும் நிதியினை ஆலயத்திருப்பணிகளுக்காக வழங்கவுள்ளார்.இதன் சிடி விளிஜிடு அடியேன் குறியிடும் ஆலய வளச்சிக்காக, சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், புங்குடுதீவு கண்ணகை அம்பாள் ஆலயம், புங்குடுதீவு பெருங்காடு சிவன்கோவில், புங்குடுதீவு பணாவிடை சிவன் ஆலயத்திலும், பெற்று அதனால், வரும் நிதி, ஆலயங்கள் நிர்வாகம், பெற்று கொள்ளும், அடியேன், எனது தந்தை தாய், எனது அன்பு, சகோதரம் நினைவாக சமப்பிக்கிறேன்!
சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேலு
candavadi1vddi2
Thevaram
Thevaram Inner
Thevaram Back
அவர் பாடியமேற்படி இறுவட்டு சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயர் ஆலயத்திலும் புங்குடுதீவு கண்ணகை அம்பாள் ஆலயத்திலும் பெற்றமுடியும் என்பதை அறியத்தருகிறோம். நீங்கள் இறுவட்டுக்குக் கொடுக்கும் பணம் ஆலய திருப்பணிக்காக காலம்சென்ற அவரின் தந்தைஅமரர் உயர்திரு வேலுப்பிள்ளை சுப்பையா  தாய் அமரர் திருமதி செல்லமுத்து சுப்பையா மற்றும் உடன்பிறப்புக்கள் அமரர்சுப்பையா கணேஸ், அமரர்சுப்பையா கந்தசாமி(காந்தி), அமரர்சுப்பையா கனகலிங்கம், அமரர்சுப்பையா சரஸ்வதி ஆகியோரின் நினைவாக  வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-விழாக்குழுவினர்-

ad

ad