புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் முதலமைச்சர் சி.வி. மிக நல்லவர்


அவருடன் பேசி பிரச்சினைக்குரிய பல விடயங்களை தீர்க்கலாம் என்கிறார் ஜனாதிபதி)
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மிகவும் நல்லதொரு மனிதர். அவருடன் இணைந்து பணி யாற்றுவதன் மூலம் வடக்கில் நிலவும் பல பிரச்சினை களுக்கு இலகுவாகத் தீர்வுகளைக்
காணமுடியும் எனத் தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதியாகப் பதவி பெற்றதன் பின்னர் முதற் தடவையாக தேசிய ஊடகங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மாளி கையில் சந்தித்து உரையாடிய போது எழுப்பிய பிரத்தியேகக் கேள்வியொன் றுக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப் படுகொலை தீர்மானம் மற்றும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கம் தொடர்பாகக் கூறிவரும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாகத் தங்களது கருத்து என்ன என வினவிய போதே ஜனா திபதி இவ் வாறு பதி லளித்தார். வட மாகாண சபையைப் பொறுத்த வரையில் அதன் முதலமைச்சராக உள்ள விக் னேஸ்வரன் மிகவும் நல்லவர்.
அவரை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரியும். கொழும்பில் உயர் நீதிமன்றத் தில் நீதியரசராகப் பணியாற்றியவர். அவருக்கு இந்நாட்டிலுள்ள சகல விதமான சட்ட வரையறைகள் பற் றியும் நன்கு தெரியும். எனவே அவர் வட மாகாண சபையின் தலைமைப் பதவிக்கு மிகவும் பொருத்த மானவராகக் காணப் படுகிறார்.
அவருடனோ அல்லது வட மாகாண சபையு டனோ எவ்விதத் திலும் எந்த விதமான முரண் பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை. அவருடன் கலந்துரையாடி வட மாகாண சபையின் நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் அங்கே சில நிர்வாக முறைகேடுகள் இருந்தமை உண்மையாக இருக்கலாம். அவற்றை இனியும் தொடர விடாது மத்திய அரசாங்கமும். மாகாண அரசாங்கமும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் செற்பாடுகளை வரையறுத்து செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசும் மாகாண அரசும் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதனால் இரு தரப்புக்குமே பாதிப்பு, அதனால் மக்களும் பாதிப்படைவர். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுப்பு மூலமாக அடுத்த கட்ட நகர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். இது புதிய அரசாங்கம். எம்மிடம் புதிய கொள்கைகள் உள்ளன.

ad

ad