புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2015

 
பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட குப்பிழான் இளைஞன்.
குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட திரு நடராஜா சிவரூபன் அவர்கள் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் பற்றி அறிய முடிவதாவது குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வாகன தரிப்பிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காலையில் தனது கடமைக்கு திரும்பும் போது வாகன தரிப்பிடத்தில் ஒருவர் விழுந்து கிடந்தார். இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையையும், அவசர சிகிச்சை பிரிவையும் சம்பவ இடத்திற்கு அழைத்தார்.
அவசர பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னராகவே அவர் இறந்து விட்டார். ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண மரணமாகவே பொலிசார் நோக்கினர். அதன் பின்னர் பிரேத பரிசோதனையில் நெஞ்சுப் பகுதி, நாரிப் பகுதியில் பல காயங்கள் காணப்பட்டன. இந்த காயங்கள் எப்படி வந்தது என்று இன்னும் மர்மமாக உள்ளது.
சம்பவம் பற்றி மேலும் அறிய வருவதாவது இலண்டன் சவுத்தோல் பகுதியில் வசிக்கும் திரு சிவரூபன் லண்டனில் இருந்து கோச் மூலம் 27-02-2015 வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில பேர்மிங்கத்திலுள்ள மாநகர பிரதான பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் எப்படி வாகனத்தரிப்பிடத்திற்கு வந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.
தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ள பொலிசார் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தந்து உதவுமாறு பொதுமக்களை கேட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு வந்தவர் மறுநாள் காலை 9.30மணிக்கு பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் ஏன் லண்டனிலிருந்து 100 மைல் தூரத்திலுள்ள பேர்மிங்கம் நகருக்கு வந்தார் என்று இன்னும் மர்மமாக உள்ளது.
ஆரம்பத்தில் இலண்டனில் வசிக்கும் அவருடைய உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ அடையாளம் கண்டு இந்த சம்பவத்தை பொலிசாரால் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. அவரை யாரும் தேடவும் முயற்சி செய்யவில்லை என்று அறிய முடிகின்றது.
அவரின் கைத்தொலைபேசியில் உள்ள தொடர்பிலக்கம் மூலம் குப்பிழானில் வாழும் அவர்களுடைய குடும்பத்திற்கு பொலிசாரால் தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வெளிநாடுகளில் வதியும் அவரது உறவினர்கள் பொலிசாருடன் தொடர்பை எடுத்தனர்.
குப்பிழான் கேணியடி பகுதியை பிறப்பிடமாக கொண்ட திரு சிவரூபன் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.
39 வயதான அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பித்தக்கது.
அவரின் மரணம் மர்மங்கள் நிறைந்தாகவும் அவர் பற்றிய தகவல்கள் அறிய முடியாமலும் இருக்கின்றது.
பிரித்தானியாவிலுள்ள ஊரவர்கள் உறவினர்களுடனும் எந்த விதமான தொடர்புகளை பேணுவதில்லை என்பதும். அவரைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo2J.html#sthash.H4oOKH1U.dpuf

ad

ad