புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

இரண்டாம் முறையும் நீதிமன்றில் ஆஜராகாத கெஹலிய ; நாடாளுமன்றம் ஊடாக அழைக்க மன்று உத்தரவு


லலித்-குகன் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் ஊடாக கெஹலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
 
லலித் , குகன்  வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . இன்றைய விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊடக பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவை மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
எனினும் இன்றைய தினமும் கெஹலிய ஆஜராகவில்லை . இதனையடுத்தே இன்றைய தினம் மேற்கண்ட உத்தரவை மன்று பிறப்பித்துள்ளது.
 
மேலும் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போன லலித் மற்றும் குகன் தொடர்பிலான வழக்கில் யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட  முன்னாள்  ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இரண்டாம் முறையாக இன்றும் மன்றில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல சுனில் கந்துன்நெத்தியினையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது . எனினும்  இன்றைய வழக்கில் அவரும் ஆஜராகி இருக்கவில்லை. 
 
கந்துன்நெத்தியையும்  எதிர்வரும் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறும் இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
காணாமல் போன குகன் மற்றும் லலித் ஆகியோர் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்  போது கெஹலியவிடம்  குறித்த இருவருக்கும்  என்ன நடந்தது என கேட்கப்பட்டது. அதன்போது அவர்கள் உயிருடன் தான்  இருக்கின்றனர் என்று கெஹலிய பதிலளித்துள்ளார்.  
 
அதனையடுத்து குறித்த செய்தி கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகியது. அதனையடுத்து குறித்த வழக்கிற்கு சாட்சியாக தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ஒருவர் மன்றில் சாட்சியமளித்திருந்தார்.
 
அதன்பின்னர் ஹெகலியவிற்கு நீதிமன்றம்  அழைப்பாணை பிறப்பித்தது.  எனினும்  அழைப்பாணை பிறப்பித்து இரண்டு தடவைகளும்  மன்றில் ஆஜராகவில்லை. மூன்றாவது தடவையும் ஆஜராகுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.  
 
எதிர்வரும் வழக்கு யூலை 30 ஆம்  திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ad

ad