புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

லலித், குகன் காணாமல்போன வழக்கு:

கெஹெலிய, ஹந்துன்நெத்திக்கு யாழ். நீதிமன்று அழைப்பாணை

பாராளுமன்றின் ஊடாக அனுப்பிவைப்பு
முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித் குமார் வீர ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் பொ. சிவகுமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.  இதேவேளை, இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், அவரையும் அடுத்த தவணையில் மன்றுக்கு வருமாறு நாடாளுமன்றத்தினூடாக அழைப்பாணை விடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
முன்னணி சோஷலிச கட்சியைச் சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி காணாமல் போனார்கள். அவர்கள் பயணம் செய்த மோட்டார் வண்டி, கோப்பாப் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்பான தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை.
இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசார ணைகள், யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் என கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கின் விசார ணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
வழக்கு விசாரணைகளின்போது, இருவரும் காணாமற்போனவர்களின் விபரங்களை திரட்டும் பணியில் ஈடுபட் டிருந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அரச தரப்பால் அழுத்தங்கள் தொடர்ந்து இருந்தன என அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்திருந்த னர். இதனையடுத்து முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். மாவட்ட படைகளின் முன்னாள் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதவான் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
லலித், குகன் ஆகியோர் காணாமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல, அவ்விருவரும் கடத்தப்பட வில்லை. பொலிஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். விசா ரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படு வார்கள் என்று கூறியிருந்தார் என நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
லலித் மற்றும் குகன் ஆகியோருடன் போராட்டங்கள், கூட்டங்களை நடத்திய போது அவர்களுடன் இருந்த நாடாளு மன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தியையும் சாட்சியம் அளிப்பதற்கு இன்று புதன்கிழமை ஆஜராகும்படி கூறியிருந்தபோதும், அவரும் இன்று மன்றில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், கெஹெலியவையும் ஹந்துன் நெத்தியையும் அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

ad

ad