புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு எதிர்ப்பு


காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்புப்
போராட்டம் திருகோணமலையில் நேற்று நடத்தப்பட்டது.
 
இந்தப் போராட்டம் இடம் பெற்றிருந்தாலும், 60 பேர் வரையில் ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்துள்ளனர். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வு திருகோண மலையில் நேற்று ஆரம்பமானது.
 
குச்சவெளிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில், சாட்சியமளிப்பதற்காக 53 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 
 
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளைப் புறக்கணிக்குமாறு தமிழ் சிவில் சமூகம் அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே, இந்த அமர்வு இடம்பெற்றது. அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், குச்சவெளி பிரதேச செயலகம் முன்பாக, காணாமற்போனோரின் உறவுகள் வாயில் கறுப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்தினர்.
 
உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்று அவர்கள் கோ­ம் எழுப்பினர். அத்துடன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் திருகோணமலை இணைப்பாளரான வணபிதா. வி.யோகேஸ்வரன் அமர்வு ஆரம்பமாகிய சிறிது நேரத்தில் உள்ளே சென்று அமர்வை புறக்கணிப்பது தொடர்பான தமது முடிவை தெரிவித்திருந்தார்.
 
சிறிது நேரத்தில் போராட்டக்காரர்கள் வெளியேறினர். அதன் பின்னர் ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றது. இதில் 60 பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர். 
 
இன்று முதல், ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் தனித் தனியே விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். இதன் மூலம் அதிகளவிலானோரது சாட்சியத்தைப் பதிவு செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ad

ad