புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

உலக கோப்பை இந்தியா தோல்வி கான்பூரில் ரசிகர்கள் ஆவேசம் டிவியை உடைத்தனர்

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன
. முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெற்ற  2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும்  மோதின.இதில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில்  களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 328 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 105 ரன்களும் , பிஞ்ச் 81 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டது. முதல் விக்கெட்டுக்கு தவானும் ரோகித்சர்மாவும் 76 ரன்கள்  எடுத்து இருந்த போது தவான் 45 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (1) ரன்னில் ஏமாற்றம அளித்தார். தொடர்ந்து ரோகித் சர்மா (34), ரெய்னா (7) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 32  ரன்களுக்கு 4 முண்ணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணி தோல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 

அப்போது ரகானேவும் கேப்டன் தோனியும் சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரகானே 44 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 16 ரன்களில் வெளியேற இந்திய அணி கேப்டன் தோனியை மட்டுமே நம்பி இருந்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய தோனி 65 ரன்களில் ரன் அவுட்டில் வெளியேற இந்திய அணியின் கனவு முற்றிலும் தகர்ந்து போனது.  தொடர்ந்து களம் இறங்கிய பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. ஆட்ட நாயகன் விருதை சதம் அடித்த் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பெற்றார்.

லீக் போட்டிகளிலும், காலிறுதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இன்று எந்த ஒரு போராட்டமும் இன்றி ஆஸ்திரேலியாவிடம் முற்றிலும் சரணடைந்து போனது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததுமே இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழப்பில் இருந்தனர் அவர்களின் ஒரே நம்பிக்கை டோனியாக இருந்தது டோனி அவரும் அவுட் ஆனதும் அந்த நம்பபிக்கையும் அவர்களுக்கு போனது.  உத்த்ரபிரதேச மாநிலம் கான்பூரில் டிவி பார்த்து கொண்டு இருந்த ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர்.அவர்களால் இந்தியாவின் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.அங்கிருந்த டிவியை அடித்து உடைத்தனர். 

ad

ad