புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

தாமரை போராட்டம்: கொதிக்கும் ஞானி!

கணவரிடம் நியாயம் வேண்டி கவிஞர் தாமரை மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள  பத்திரிக்கையாளர்
ஞானி, "கோட பாடுகள் தத்துவங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கானது இல்லையா?"  என கேள்வி எழுப்பி உள்ளார்.
கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி கவிஞர் தாமரை, 4 வது நாட்களாக இன்று அவரது வீட்டு முன்  தர்ணா மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தில் முதல் இரண்டு தினங்கள் உண்ணாவிரதம் இருந்த தாமரை கடந்த 2 தினங்களாக தியாகு தங்கியிருப்பதாக கூறப்படும் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் தன் போராட்டத்தை தொடர்ந்து  வருகிறார்.

கவிஞர் தாமரையின் இந்த போராட்ட முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு எதிர்ப்பு கருத்துக்கள் வலுத்துவரும் நிலையில் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
“தனது தனிப்பட்டபிரச்சினையை தமிழ் தேசிய வாதம், பெரியாரி ஸம், மார்க்சியம் என்பவற்றோடு குழப்பிக் கொள்வதில் நியாயமில்லை என்ற கருத்து பொது வாழ்வில் இருக்கும் இருவரின் குடும்பப் பிரச்னை பற்றிய கருத்துகளில் பலரால் திரும்பத்   திரும்ப சொல்லப்படுகிறது.
எனக்கு எழும் கேள்வி இதுதான்: அப்படியானால் எந்த அரசியல் தத்துவத்துக்கும் தனி மனித வாழ்க்கை நடத்தைக்கும் தொடர்பே இருக்கத் தேவையில்லையா? நாம் கற்கும், பயிலும் கோட்பாடுகள் தத்துவங்கள் நம் தனி வாழ்க்கைக்கானவை இல்லையா? தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா?" என்று ஞானி கேள்வி எழுப்பி உள்ளார். இதனை தாமரை தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
மேலும் தனது முகநுால் பக்கத்தில் தனது நான்கு நாள் போராட்டம் குறித்து கருத்து பதிந்திருக்கும் தாமரை, “நான்காம் நாள் இரவும் வேளச்சேரி அம்மன் கோயில் வீதியில் கழிகிறது. இன்று நிலமை சற்றுத் தேவலை. ஒரு நாள் அனுபவம் கூடிவிட்டதல்லவா !!! 

கொசுக்கடிக்கு ஒரு ஏற்பாடு செய்தாகி விட்டது. கொசுவத்திச் சுருள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கொசு கொஞ்சம் பயப்படுவது போல்தான் தெரிகிறது. சமரன் தான் பாவம். சித்திரக்கதை வாசிக்கச் சொல்லிக் கேட்டு அலுத்துப் போய் தூங்கி விட்டான். இடைவிடாத தொலைபேசி அழைப்புகளின் ஊடாக அந்த வாக் கைக் காப்பாற்ற முடியவில்லை. சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம். அத்துடன் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ad

ad