புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

துறைமுக நகர் உடன் நிறுத்தம்


 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு
வந்த துறைமுக நகரத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
திட்டம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவை உபகுழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அனுமதி பெறப்படாமல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
அதன்படி, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இடைநிறுத்தப்படும்.
இந்த திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இரண்டு வாரங்களுக்குள் பெற்று சமர்ப்பிக்குமாறு திட்டத்தைச் செயற்படுத்தும் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
 
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பி ஒரு வாரத்தினுள் இவ்வாறானதொரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

ad

ad