புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

பெண் பலாத்காரம் - சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் அடித்துக்கொலை - பொதுமக்கள் தந்த தண்டனை



நாகலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் இழுத்து வந்து தாக்கி கொன்ற சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இதனை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், திமாப்பூர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திமாப்பூர் சம்பவம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

தாக்குதலுக்கு ஆளான அந்த இளைஞர் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து, திமாப்பூருக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது. பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்த இவர், நாகாலாந்தின் திமாப்பூரில் நாகா பழங்குடியினப் பெண்ணை பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் பல்வேறு இடங்களில் பலமுறை பாலியல் வல்லுறுவுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த இளைஞர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமாப்பூர் பகுதியில் திரண்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மத்திய சிறையை நோக்கி ஊர்வலகமாக சென்று வன்முறையில் ஈடுபட்டனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். சிறையில் இரண்டு கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த இளைஞரை தாக்கி, சிறைக்கு வெளியே இழுத்து வந்தனர். அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழத்துச் சென்ற போராட்டக்காரர்கள், அடித்து உதைத்தப்படியே இருந்தனர். இதில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் உயிரிழந்தார். 

போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். துப்பாக்கிச் சூட்டில் 25 வயது போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் போலீசார் சிலரும் காயம் அடைந்தனர். 

ad

ad