புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2015

மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புலிகளின் சொத்துக்களுக்கு மேலும் தடை நீடிப்பு


புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய யூனியன் மீண்டும் கொண்டு வந்துள்ளதால் மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த அவ்வமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள், நிதிகளை தொடர்ந்து முடக்கி வைக்க முடிந்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
எல். ரி.ரி.ஈ. அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் நீக்கியபோதும் மூன்று
மாதங்களுக்கு மட்டும் அந்த அமைப்பின் வெளிநாட்டு சொத்துகள், நிதிகளை முடக்கியிருந்தது.
மூன்று மாதம் முடிவடைந்த பின்னர் இங்குள்ள சொத்துக்களை புலிகளுக்கு சார்பான இந்த அமைப்புகள் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. இதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியதாலே ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை மீண்டும் கொண்டுவந்ததாகவும் பதிலமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை நடாத்தப்பட்ட விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலே பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் எல். ரீ. ரீ. ஈ. மீது தடை விதித்துள்ளமையானது சுயமாக நடைபெறும் ஒரு விடயமென பலரும் கருதுகின்றனர். ஆனால் அது தவறான அபிப்பிராயமாகும். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதற்கு பெரும் பங்களிப்பு செலுத்தினர்.
எல். ரீ.ரீ. ஈ ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதனை உறுதிப்படுத்தும் முகமாக இவர்கள் தொடர்ந்தும் சாட்சியங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கி வந்தனர். பிரதமர் பாராளுமன்றத்தில் பேசுவதோடு மட்டும் நின்றுவிடாது, புலிகள் அமைப்பினை மீண்டும் தடை செய்யவேண்டுமென எழுத்து மூலமான கோரிக்கை கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தால் எம்மால் பிறப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மீண்டும் இந்த தடையை பிறப்பித்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அமைப்பினர் வங்கிகளிலுள்ள தமது பணம் மற்றும் சொத்துக்களை புலிகள் மீளப்பெற்று விற்பனை அல்லது முதலீடு செய்வார்களாயின் பாரதூரமான விளைவுகள் உருவாகக் கூடும். வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடச்சியாக மேற்கொண்ட தொடர்புகளின் விளைவால் குறித்த மூன்று மாதகால அவகாசம் முடிவதற்கு முன்பாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் புலிகள் அமைப்பு மீது தடையை கொண்டு வரமுடிந்துள்ளது. இது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி மாத்திரமன்றி வரலாற்று ரீதியான வெற்றியாகவும் கருதப்பட வேண்டிய விடயமாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்திருந்த சந்தர்ப்பத்தில் அதற்கான சூழ்ச்சிகளை அப்போதைய எதிர்க் கட்சி தலைவராக விருந்த ரணில் விக்கிரம சிங்கவே மேற் கொண்டிருப்பதாக சில அரசியல்வாதிகள் நாடு முழுவதும் போலி பிரசாரம் செய்திருந்தனர். நல்லாட்சி நிலவும் எந்தவொரு நாட்டிலும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் அரச தலைவர்கள் தலையீடு செய்ய முடியாது. இந்த பிரசாரம் போலியானது என்பது இப்போது மக்களுக்கு புரிந்திருக்கும்.

ad

ad