புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

கிளுகிளு பேச்சு... வாட்ஸ் அப்-பில் பரவியது எப்படி?

டசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பெண்
காவலரிடம் கிளு கிளுப்பாக பேசிய ஆடியோ வாட்ஸ் அப் மூலம் பரவியது. இது ஒட்டுமொத்த காவல்துறையே பரபரப்பாக்கியது.

சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக மாற்றப்பட்டார். பெண் காவலரும் வேறுப்பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இருவரிடமும் தனித்தனியாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் காவல்துறை ஆணையர் ரவிக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

உதவி கமிஷனரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முதலில் அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். பிறகு ஆடியோவை போட்டுக் காண்பித்த அதிகாரிகளிடம் இது என்னுடைய குரல் இல்லை என்று உதவி கமிஷனர் தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த அதிகாரிகள் தடயஅறிவியல் துறைக்கு குரல் ஆய்வு நடத்த உத்தரவிடட்டுமா என்று அதிரடியாக கேள்வி கேட்டனர். இதனால் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் காவலரிடம் பெண் காவல் அதிகாரிகள் துணையுடன் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காவல்துறையில் பணியாற்றும் நீங்கள் எதற்காக இந்த ஆடியோவை பத்திரிக்கைளுக்கு கொடுத்தீர்கள் என்று விசாரணை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கு அந்த பெண் காவலர், பத்திரிக்கைகளில் வெளிவந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தாராம். அப்படியென்றால் வெளிவந்தது எப்படி என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், உதவி கமிஷனர் பேசியதை தன்னுடன் பணியாற்றும் சில பெண் காவலரிடம் போட்டு காண்பித்ததாக கூறியிருக்கிறார். அவர்களின் பெயர்களை
யும் பெண் காவலர் விசாரணை அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறார். அதில் ஒரு பெண் காவலர் தான் உளவுத்துறை காவலரிடம் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விட்டதாக முழு விவரத்தையும் அவர் சொல்லி கதறி அழுது இருக்கிறார்.

இதனால் இந்த சம்பவத்தில் பங்குள்ள அனைவரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். இதற்கிடையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட உதவி கமிஷனர் கடும் மனவருத்தத்தில் பணியாற்றினாராம். அவரது மன உளைச்சலால் பணியை முழுமையாக செய்ய முடியவில்லையாம். இதனால் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று விடுப்பில் சென்று விட்டார்.

இதற்கிடையில் வாட்ஸ் அப் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைவர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் நேரிடையாக களமிறங்கி விசாரணை நடத்தியுள்ளார் ஜார்ஜ். இப்போது விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில தினங்களில் இந்த விசாரணையின் விரிவான அறிக்கை டி.ஜி.பி.க்கு அனுப்பப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர், பெண் காவலர் மற்றும் இதர காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் உதவி கமிஷனர் சஸ்பெண்டு செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "உதவி கமிஷனரின் போன் பேச்சால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் உடனடியாக அவர் பணியாற்றும் ஆயுதப்படையில் உள்ள உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருக்க வேண்டும். இல்லையெனில் காவல்துறையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு கமிட்டியிடம் புகார் தெரிவித்து இருக்கலாம். இது எதையும் செய்யாமல் அவர் காவல்துறையை களங்கப்படுத்தும் விதத்தில் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டார். இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில் இந்த ஆடியோவை முதலில் யார் அனுப்பியது, அது யாருக்கெல்லாம் பகிரப்பட்டது உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்துள்ளோம்.
இந்த பட்டியலில் அதிகாரிகள் உள்பட 15 பேர் இருக்கிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் துறைவாரியான நடவடிக்கை பாயும். காவல்துறையிலும் சரி, பொது மக்களும் சரி, அவதூறான தகவல்களையும், ஆபாச தகவல்கள், அனுமதியின்றி புகைப்படங்களை மற்றவர்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தால் சைபர் கிரைம் சட்டத்தின்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, நல்ல விஷயங்களை மட்டுமே பகிருங்கள். உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிருவதை தவிர்ப்பது நல்லது" என்றார்.

ad

ad