புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!
 இந்திய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில், வங்கதேச அணி, இந்திய அணியை மிரட்டும் வகையில்தான்
ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் தமிம் இக்பால் அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 25 ரன்களை அடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து எந்த ஜோடியையும் நிலைத்து நின்று ஆட விட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய வீரர்கள் குறியாக இருந்தனர்
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவும்யா சர்க்கார், மக்மதுல்லா இந்திய பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர். மக்மதுல்லா 21 ரன்கள் எடுத்திருந்த போது, அவர் அடித்த பந்து எல்லைக் கோட்டை நோக்கி சென்றது. எல்லைக் கோட்டில் நின்ற ஷிகர்தவான் அந்தரத்தில் மிதந்து வந்த பந்தை தடுத்து பிடிக்க முயன்றார். அப்படியும் பந்து கையில் சிக்கவில்லை.
பின்னர் அதனை மீண்டும் பிடித்தார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் எல்லைக்கோட்டினை தொட்டுவிட முயன்றார் தவான்.அந்த சமயத்தில் புத்திசாலித்தனமாக பந்தை எல்லைக்குள் வீசி விட்டு பவுண்டரி லைனுக்கு வெளியே காலை வைத்து பேலன்ஸ் செய்து விட்டு மீண்டும் வந்து அந்த பந்தை பிடித்து மக்மதுல்லாவை அவுட் செய்தார் தவான். இந்த போட்டியில் அற்புதமாக பிடிக்கப்பட்ட கேட்ச் இது.

ad

ad