புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

அமைச்சர் ராஜpதவுக்கும் மகனுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

2 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு
இளம் பெண் ஒருவரை கடத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள் என்ற விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோரை ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ராஜிதவின் இளைய மகன் இளம் பெண் ஒருவரைக் கடத்தி தன்னுடன் வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ராஜித சேனாரத்னவின் இளைய மகனால் தனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குறித்த பெண்ணின் பெற்றோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குற்றம் சுமத்தியிருந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜித சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரத்ன தனது 16 வயதான மகளை, வாகனம் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாகவும், இது தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியோரிடம் முறைப்பாடு வழங்கியும் பலனில்லை எனவும் அவர்கள் கூறினர். அன்று முதல் இன்றுவரை தமது மகளை தன்னுடனேயே வைத்துள் ளதாகவும், இதுவரை அவரை பார்க்கவோ தொடர்புகொள்ளவோ முடியவில்லை என வும் பெண்ணின் தந்தை மேலும் குறிப்பிட்டார்.

ad

ad