புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

நாடுகடத்தலில் இருந்து தப்பிய தமிழீழ காவற்துறை அதிகாரி - See more at: http://www.asrilanka.com/2015/03/20/28176#sthash.MrQbaY55.dpuf

ltte
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த ஈழத் தமிழர் ஒருவர் இறுதி நேரத்தில் நாடுகடத்தல் தீர்மானத்தில் இருந்து
பாதுகாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கண்ணன் காளிமுத்து என்ற 36 வயதான அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவற்துறை அதிகாரியாவார்.
அவர் சிறிலங்காவில் பாரிய துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், சிலவருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.
இதனை அடுத்து அவரை நாடுகடத்தப்பட்ட பல தடவைகள் முயற்சித்த போதும், அவர் இரண்டு தடவைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள கோன்ப்ரூக் அகதி முகாமில் அதி உச்ச கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று அங்கிருந்து சிறிலங்காவுக்கு நாடுத்தப்படவிருந்த நிலையில், அவர் உளரீதியாக பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரை நாடுகடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இந்த உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.


ad

ad