புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

அனைத்தையும் நிறைவேற்ற 100 நாட்கள் போதாது: ரணில்
தொழில்வாயப்பு வழங்குதல், கல்வி வளர்ச்சி உட்பட பல விடயங்களை 100 நாட்களில் செய்து முடிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 100 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிவாரணங்களையும் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
100 நாட்களில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கியதன் பின்னர் ஏனைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
வளர்ச்சியடைந்துள்ள உலகில் இன்று இளஞர்களுக்கு விரும்பியவற்றை செய்வதற்கான பூரண சுதந்திரம் தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
10 வருடத்தின் பின்னர் ஊழல் மோசடிகள் அற்ற வாழ்க்கை செலவை குறைத்து, தொழிற்பயிற்சி வழங்குதல், வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொழில் வழங்குவதன் மூலம் மேலும் வலுவடைய செய்வோம்.
இதேவேளை 10 வருடங்களில் செய்யும் வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் 100 நாட்களில் செய்துள்ளது.
எதிர்வரும் 5 வருடங்களினுள் 100 இலட்ச வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ad

ad