புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

டெல்லியை ஊதித்தள்ளிய பெங்களூர்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8வது ஐ.பி.எல் தொடரின் 26வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிங்கிய ஸ்ரீரியாஸ் ஐயர் ஓட்டங்களின்றி மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான மயான்க் அகர்வால் 27 ஓட்டங்களும், அணித்தலைவர் டூம்னி 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் இன்றும் விரைவில் ஆட்டமிழந்து 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
அதிகபட்சமாக  கேதர் யாதவ் 33 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பந்துவீச்சில் பெங்களூர் சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், வருண் ஆரோன், டேவிட் வீஸ் இருவரும் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 96 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியின் கெய்ல் டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்து 6 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் கடந்து 62 ஓட்டங்களும், அணித்தலைவர் கோஹ்லி 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
10.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 99 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடுத்தடுத்த பந்தில் இரண்டு விக்கெட் வீழ்த்திய பெங்களூர் அணியின் வருண் ஆரோன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad