புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணம் கி.மீற்றருக்கு 124 மில்.ரூபா

* லுணுகம்வெஹர - கதிர்காமம் 1 கி.மீ 259 மில்லியன் செலவு
* கேகாலை - 1 கீ.மீ 722 மில்லியன் செலவு
மக்களின் பணம் வீண் விரயம்
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையம் வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணமாக ஒரு கிலோமீற்றருக்கு 12
4 மில்லியன் ரூபா கடந்த அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டு ள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
அவ்வாறே, தேசிய சேமிப்பு வங்கியில் பெறப்பட்ட கடனுக்காக நெடுஞ்சாலைகள் அமைச்சு மாதாந்தம் 275 மில்லியன் ரூபாவை வங்கிக்கு செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேசிய சேமிப்பு வங்கியில் 11 வீத வட்டிக்கு 28 பில்லியன் அதாவது 28,000 மில்லியன் ரூபாவை கடந்த அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது. இலங்கையின் பிரதான பாதைகளை அமைப்பதாக கூறியே இந்த வங்கியில் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது. செயற்திறன் ஆய்வுச் சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே வங்கிகள் கடன் வழங்க வேண்டும். ஆனால், இவ்விதம் சான்றிதழ் பெறப்படாமலே வங்கியும் 24 திட்டங்களுக்கு கடன் வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட திட்டத்துக்காக வங்கியில் இருந்து பணம் பெறும் போது அந்த செயற்பாட்டுக்கே பணம் செலவிடப்பட வேண்டும். ஆனால், கடந்த அரசாங்கம் இவ்விதம் செய்யாமல் தனது சொந்த செலவுகளுக்கும், அமைச்சின் செலவுகளுக்கும் பயன்படுத்தியுள்ளது. வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கும், அமைச்சின் செலவுகளை செய்வதற்கும் விரயம் செய்யப்பட்டுள்ளதுடன் நிதி, நிர்வாக ஒழுங்குகளை மீறி தான்தோன்றித்தனமாக செலவுகள் செய்துள்ளது.
பாதை அபிவிருத்தி செய்வதாக கூறி பெறப்பட்ட இவ்வளவு பெரிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் அமைச்சு இருக்கின்றது. அவ்வாறே, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், நெடுஞ்சாலைகள் அமைச்சு இந்தத் தொகையை செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களால் வைப்பு செய்யப்பட்ட பணம் கடந்த அரசாங்கத்தினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் ஊழியர் சேமலாப நிதியத்திடம் இருந்து மாத்திரமல்லாமல் அரச வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் கடன் பெறப்பட்டுள்ளதால் 7 முதல் 8 பரம்பரையினர் இந்தத் தொகையை வங்கிகளுக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறே, லுணுகம் வெகர - கதிர்காமம் பாதை செப்பனிடுவதற்காக கிலோமீற்றருக்கு 259 மில்லியன் ரூபாவும், கேகாலையில் 19 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படுவதாக கூறி ஒரு கிலோமீற்றருக்கு 722 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. இந்த வீதி தற்போது மழை காலங்களில் வெள்ளத்தினால் மூழ்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பூனாலை பருத்தித்துறை பாதை அபிவிருத்திக்கு கிலோமீற்றருக்கு 318மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பது தொடர்பில் கடந்த அரசாங்கம் செலுத்திய ஆலோசனைக் கட்டணத்தில் இன்னுமொரு பாதையை அமைக்க முடியுமென்றும் இவ்விதம் மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்பட்டு நாட்டின் நிதி கொடுக்கல் வாங்கல் மீறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ad

ad