புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

நேபாளம் சென்ற ஏசி130 விமானம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் இலங்கை திரும்ப முடியாத நிலை

புவியதிர்வால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிவாரணங்களை எடுத்துச் சென்ற இலங்கை விமானப்படையின் ஏசி130 விமானம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் இலங்கை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
மருத்துவ உதவிகளுக்காக இந்த விமானம் நேபாளத்துக்கு சென்றிருந்தது.
நேபாளத்தில் தங்கியிருந்த 35 இலங்கை மாணவர்களை மீட்டு இலங்கைக்கு அழைத்துவரும் நோக்கத்துடன் இது அனுப்பப்பட்டது. எனினும் தொழில்நுட்ப பிரச்சினையால் அது முடியாமல் போனது.
இதனையடுத்து சுறுசுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காத்மண்டு விமானநிலைய ஓடுபாதையில் இருந்து இலங்கை விமானம், தரிப்பிடப் பகுதிக்கு அகற்றப்பட்டது.
எனினும்,  குறித்த விமானம் சரிசெய்யப்பட்டு இன்று இலங்கை மாணவர்களுடன் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad