புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

அஷ்லான்ஷா ஹாக்கி: தென்கொரியாவை போராடி சமன் செய்தது இந்தியா!




















கோலாலம்பூரில் நடந்து வரும் அஷ்லான்ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய-தென்கொரிய அணிகள் மோதிய  ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

புது பயிற்சியாளர் வான் ஆஷ்
ஆஸ்திரேலியரான டெர்ரி வால்ஷ் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியபின் நெதர்லாந்தை சேர்ந்த வான் ஆஷ் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதற்கு பின் இந்திய அணி முதல் முறையாக களமிறங்கியுள்ள மிகப் பெரிய தொடர் மலேசியாவில் நடைபெற்று வரும் அஷ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி.கோலாலம்பூரில் நடந்த வரும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பலம் பொருந்திய தென்கோரிய அணியை எதிர்கொண்டது.

இந்தியா முன்னிலை


ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. நிக்கின் திம்மையா இந்த கோலை அடித்தார். 23வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்திற்காக திம்மையாவிற்கு பச்சை அட்டை காட்டப்பட்டது. அதோடு தென்கொரியாவிற்கு சாதகமாக பெனால்டியும் வழங்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பை கோலாக்க தென்கொரியா எடுத்த முயற்சிகளை இந்திய வீரர்கள் அபாரமாக தடுத்துவிட்டனர்.

தென்கொரியா பதில் கோல்

தொடர்ந்து 24வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் ஹேசுங் ஹவான் பதில் கோல் அடித்தார். கோல்கம்பத்தின் வலதுபுறத்தில் ஃபிளிக் செய்யப்பட்ட பந்து அருமையாக கோலானது. முதல்பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.

வாய்ப்பை கோட்டை விட்ட சர்தார்


பிற்பாதியில் 32வது நிமிடத்தில் ரூபிந்தர் அடித்த லாங் கிராசை சர்தார்சிங் மற்றும் தரம்வீர் இருவருக்குமே ட்ராப் செய்ய வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டனர். இதனால் அருமையான கோல் வாய்ப்பு வீணானது.
முன்னிலை பெற்ற தென்கொரியா

பிற்பாதியில் 52வது நிமிடத்தில் தென்கொரிய அணி இரண்டாவது கோல் அடித்தது. செங்குன் லீ இந்த கோலை அடித்தார். இதனால் தென்கொரிய அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.
ரகுநாத் அபார கோல் 
பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில் 56வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி கார்னர்  வாய்ப்பு கிடைத்தது. இதனை ரகுநாத் அழகாக கோலாக்கினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

ad

ad