புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2015

20 தமிழர்களை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதியுமாறு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு


கடந்த 7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20 பேரை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் அம்மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை வெள்ளிக்கிழமை காலை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் சிங் குப்தா, டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. என்கவுன்டர் என்பது இருமாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும் என்றார். 

தொடர்ந்த நடந்த வழக்கில், 20 பேரை கொன்ற வழக்கில் ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிவதே நியாயமாக இருக்கும் என்று ஐகோர்ட் கூறியது.

ad

ad