புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2015

20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்! திருமாவளவன் பேட்டி!



20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கள்) விசாரணைக்கு வருகிறது. 

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும், நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மனுதாரரின் சார்பில மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார். வழக்கில் நீதி கிடைக்கும் வரை சட்டப்பூர்வமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், உண்மையான குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ஏற்ற வகையில், சிபிஐ விசாரணைக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறோம். இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். உச்சநிதிமன்றத்தின் நீதிபதி ஒருவரின் தலைமையில் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். 

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது. தமிழக அரசும் இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து தமிழக முதல் அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்

ad

ad