புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

20ம் திகதி மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் இரகசிய சந்திப்பு
ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பு கொழும்பில் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவரும் கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகருமான ஒருவரே இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தெரிய வருகின்றது.
இந்த வர்த்தகருக்கு அரசியலில் முக்கிய பதவி ஒன்றை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதியை களமிறக்கச் செய்யுமாறு கோரி ஐக்கிய சுதந்திர முன்னணியில் உள்ள சிலர் வலியுறுத்தி வரும் நிலையில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பில் பொதுத் தேர்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் இந்த சந்திப்பின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறும் என பல தரப்பினரால் கூறப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad