புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 படகுகளை மீட்டுச்செல்ல வருகிறது இந்தியக் குழு

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையில்
தடுத்துவைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகளை மீட்டுச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 143 பேர் இன்று  இலங்கை வருகின்றனர்.
 
 
இலங்கையில தடுத்துவைக்கப்பட்டிருந்த 87 படகுகளையும் விடுவிக்க கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 33 படகுகள் தமிழக தரப்பினரால் மீட்டுச் செல்லப்பட்டன. 
 
 
மேலும் இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள 30 படகுகள் மற்றும் மன்னாரிலுள்ள ஒரு படகு என 31 படகுகளை மீட்டுச் செல்வதற்கு குறித்த குழுவினர் இலங்கை வருகை தருகின்றனர்.
 
 
இவர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை படகுகளை மீட்டுச் செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்குள்ள 23 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad