புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3200-ஐ தாண்டியது

நேபாள நாட்டில் கடந்த சனிக்கிழமை நில அதிர்வு ஏற்பட்டது. காட்மாண்டுவில் இருந்து வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாக கொண்டு, 7.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது. நேபாளத்தில் கடந்த 81 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தேசிய அழிவாக இது கருதப்படுகிறது. 

இதுவரை 3218 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்திய ராணுவமும், விமானப்படையும் மீட்பு பணியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் மின்சார வினியோக முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியா மட்டும் 13 ராணுவ விமானங்கள் மூலம் மருத்துவ வசதி, உணவு ஆகியவற்றை வழங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

ad

ad