புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்பு


உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்று பாதுகாப்பு துறை தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது. மீதம் உள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறார்கள். அவர்கள் சில முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளனர். இதனால் அதிபர் அபட்ராபோ மன்சூர் ஹதி சவூதி அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக கருதப்படுகிறது. ஏமன் நாட்டில் 4,000–க்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் ஏராளமான பேர் நர்சுகளாக வேலை செய்கிறார்கள். உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து இருப்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ்  தெரிவித்தார். ஏமனின் தலைநகரான சனாவில் இருந்து, இந்தியர்களை விமானத்தில் அருகில் உள்ள குட்டி நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவர்களை கப்பலில் அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து எம்.வி.கவரட்டி, எம்.வி.கோரல்ஸ் என்ற 2 பயணிகள் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்த கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் சுமித்ரா போர்க்கப்பல் பாதுகாப்பு அளித்தது. 

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான 2 பெரிய சரக்கு விமானங்கள் மூலம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, ஏமன் நாட்டில் விமானம் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்று பாதுகாப்பு துறை தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது. மீதம் உள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவும் மீட்பு பணிகள் நடைபெற்றது.

ad

ad