புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2015

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் மே 12-ந் தேதி வரை ஜெயலலிதா சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேரின் ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல் மே 12 -ந் தேதி வரை சொத்து குவிப்பு வழங்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 எனினும் வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
முன்னதாக பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் இரு தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதி வருகிறார்.
இவ்வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வழங்க மேலும் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் மே 12-ந் தேதி வரை ஜெயலலிதா சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேரின் ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல் மே 12 -ந் தேதி வரை சொத்து குவிப்பு வழங்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 எனினும் வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
முன்னதாக பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் இரு தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதி வருகிறார்.
இவ்வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வழங்க மேலும் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad