புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

50 மணித்தியாலங்களின் பின்உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட நேபாளப் பெண்

nepal1-720x480









நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதில் சிக்குண்ட பெண் ஒருவரை இந்தியாவின் தேசிய பேரிடர் படையினர்  உயிருடன் மீட்டெடுத்துள்ளனர். குறித்த பெண் சுமார் 50 மணித்தியாலங்களின் பின்னரே இடிபாடுகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட பெண்ணை மீட்புப் படையினர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பெண் ஒருவர் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியுள்ளார் என மீட்புப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, மீட்புப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் மூலம் குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக இது குறித்து கருத்து தெரிவித்த பேரிடர் படை உதவித் தளபதி குளிஷ் ஆனந்த் தெரிவித்தார்.
இந் நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 6500 பேர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad