புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2015

8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது!

8 வது ஐ.பி.எல். போட்டியின் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி "த்ரில்" வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. இதை சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஆட்டம். 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியிருந்தது. இன்றைய 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் டுமினி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. சென்னையின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் மெக்கல்லமும் களமிறங்கினர். ஸ்மித் முதல் ஓவரில் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். மறுமுனையில் நின்றிருந்த மெக்கல்லம் 4 ரன்களே எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ரெய்னா 7 பந்துகளில் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இந்நிலையில் 31 பந்துகளில் 34 ரன்களை எட்டி அரை சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் பிளிஸ்சிஸூடன் ஜடேஜா கை கோர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களிலும் சென்னை அணி இதே பாணியிலான ஆட்டத்தையே தொடர்ந்தது. பிளிஸ்சிஸ் 34 பந்துகளில் 32 ரன்கள், ஜடேஜா 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். பிராவோ வந்த வேகத்தில் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் டோணி விறுவிறுவென ஆடிப் பார்த்தாலும் கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில், அஸ்வின் 12 ரன்களுடனும் மொகித் சர்மா 2 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெல்ல 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் நாதன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அகர்வாலும் கவுதமும் களமிறங்கினர். 2.3வது ஓவரில் டெல்லி 15 ரன்கள் எடுத்த நிலையில் கவுதம் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து களத்துக்கு வந்தார் அல்பி மோர்கல். அவர் நிலைத்து நின்றாலும் அகர்வால், ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களே எடுத்திருந்தது டெல்லி அணி. இருப்பினும் மோர்கலும் ஜாதவும் இணைந்து நின்றனர். ரன்களை விறுவிறுவென குவிக்க முடியாமல் சென்னை அணியின் பந்து வீச்சும் இருந்தது. 8 ஓவர்கள் இருவரும் நிலைத்து நின்ற நிலையில் 13.1வது ஓவரில் ஜாதவ் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஜாதவைத் தொடர்ந்து களத்துக்கு வந்த யுவராஜ் சிங் ஒரு சில பந்துகளை விளாசினாலும் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து டுமினி, நாதன், மிஸ்ரா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியனுக்குத் திரும்பினாலும் மோர்கல் அரைசதத்தைக் கடந்து நிலைத்து நின்று விளையாடினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரின் 3வது பந்தில் 9வது விக்கெட்டாக தாஹீர் வீழ்ந்தார். எஞ்சிய 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தாக வேண்டும்.. கையில் விக்கெட்டும் இல்லாத நிலை... இதனால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி 1 பந்தில் 6 ரன்கள் அடித்தால் டெல்லி அணி வெற்றி என்ற நிலையில் க்ளைமாக்ஸ் அரங்கேறியது. பிராவோ வீசிய பந்தை மோர்கல் அடிக்க அது பவுண்டரிக்குப் போனது.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிம்மதி பெருமூச்சுவிட்டது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. ஒரே ஒரு ரன்னில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 'அப்பாடா' வெற்றியை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெஹ்ரா 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


ad

ad