புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

ஐபிஎல் 8: சென்னைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
சென்னை அணியில் அதிரடி தொடக்க வீரர்கள் டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்குல்லம் உள்ளனர்.
ரெய்னா, டுபிளசி என அச்சுறுத்தம் துடுப்பாட்டக்காரர்களும் இருக்கின்றனர். இவர்கள் சில சமயம் ஏமாற்றுகின்றனர்.
சென்னை அணியில் டுவைன் பிராவோ, ஜடேஜா இருப்பது பலம். கடந்த போட்டியில் ஏமாற்றிய டோனி இன்று ஜொலிக்கலாம்.
ஈஷ்வர் பாண்டே, நெஹ்ரா, மோகித் சர்மா வேகத்தில் எதிரணியை மிரட்டுகின்றனர். காயம் (விரல்) காரணமாக ‘சுழல்’ வீரர் அஷ்வின் இல்லாதது பின்னடைவு.
சென்னை அணி 6 வெற்றியுடன் ராஜநடை போடுகிறது. கொல்கத்தாவை இன்று வீழ்த்தி 7வது வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும்.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா சிறப்பான அடித்தளம் அமைக்கிறார். அணித்தலைவர் கவுதம் கம்பிரும் சிறந்த நிலையிலே இருக்கிறார். மனிஷ் பாண்டே, சூர்யகுமார், யூசுப் பதான் என ‘நடுகளம்’பலவீனமாக உள்ளது.
உமேஷ் பந்துவீச்சு கடந்த போட்டியில் எடுபடவில்லை. சென்னை அணிக்கு ரசல் தொல்லை தரலாம்.
சுழலில் பியுஸ் சாவ்லாவுடன், 44 வயதான பிராட் ஹாக் கைகொடுக்க வாய்ப்பு உண்டு. சுழல் மன்னன் நரைனின் ஆப்–ஸ்பின்னுக்கு தடை விதித்தது இழப்புதான்.
சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியிடம் 2 ஓட்டங்களில் தோல்வி அடைந்த கோல்கத்தா அணி, இம்முறை பதிலடி தர முயற்சிக்கலாம்.
இதற்கிடையில் கோல்கட்டாவின் இன்றைய வானிலையை பொறுத்தவரை மழை வர 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டி மழையால் பாதிக்கப்படலாம்.

ad

ad