புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2015

தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான விற்பனை நிதி, மஹிந்தவின் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது


2014 நவம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அதிகளவான செலவுகள் ஏற்பட்டமை தொடர்பில் தேசிய லொத்தர் சபையில் கணக்காய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சபையின் புதிய தலைவர் சியாமளா பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காகவே லொத்தர் சபையில் இருந்து அதிகளவான செலவுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கிடைத்துள்ள முறைப்பாட்டின்படி ஜனாதிபதி தேர்தலின் போது லொத்தர் சபையின் 90 வீத விற்பனை மேம்படுத்தலுக்கான 400 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அது தேர்தல் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளன.
பெரும்பாலும் இவை, இசை கச்சேரிகள், உணவு மற்றும் கார்ல்ட்ன் ஸ்போட்ஸ் நெற்வேக்கின் விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை நடத்த செலவழிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த செலவுகள் தொடர்பில் அடுத்தவாரம் லஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக லொத்தர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

ad

ad