புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

பிரான்ஸ் பயணம் முடிந்தது:ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். 


9 நாட்கள், 3 நாடுகள் சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வரும் மோடி, கடந்த 9 ஆம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த பின் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். பின்னர் இன்று முற்பகல் அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனி சென்றார். 

சற்று முன் ஜெர்மனியின் லேங்கன்ஹேகன் நகரில் உள்ள ஹான்னோவர் விமான நிலையத்தைச்  சென்றடைந்த மோடி முதலில் அந்நாட்டில் நடைபெறும் ஹான்னோவர் பேர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 
அதில் ஜெர்மனி தொழிலதிபர்களைச்  சந்தித்து 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கான மூதலீடுகளை ஈட்டுவது குறித்துப் பேசுவார். இந்நிகழ்ச்சியில் 400 இந்திய நிறுவனங்களும், 3000 ஜெர்மனி பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். பின்னர் மோடியும், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கலும் இணைந்து 'இந்திய பெவிலியன்"-ஐ திறந்து வைக்கின்றனர். 

நாளை நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சகோதரி மகனது பேரன் சூரியா போசை பிரதமர் மோடி சந்திக்கிறார். பெர்லின் நகரில் முக்கியமான வர்த்தகராக விளங்கும் போஸ், ஹேம்பர்க் நகரில் உள்ள இந்தோ ஜெர்மன் சங்கத்தின் தலைவராகவும் விளங்குகிறார். ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜியின் மகளும் மோடியைச்  சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad