புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை' விசாரணை மீள ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதியின் கணக்கில் 82 மில்லியன் ரூபா வைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி நிதியுதவியாகக் கிடைத்த 82 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்து பாரிய நிதி மோசடியை செய்துள்ளார் என்பது தொடர்பாக விசாரணைகளை
ஆரம்பிக்குமாறு கோரி பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி நிதி மோசடி தொடர்பாக 2004ஆம் ஆண்டிலேயே அமைச்சர் கபீர் ஹாசிம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்திருந்தார். அவர் செய்த முறைப்பாட்டுக்கு எதுவித விசாரணைகளும் நடைபெறவில்லை. எனவே இது தொடர்பாக உரிய விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரியே பிரதியமைச்சர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
மேலும் 82 மில்லியன் ரூபா நிதி மோசடியில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, பிரதமர் ராஜபக்ஷவை அந்த சந்தர்ப்பத்தில் காப்பாற்றிவிட்டதாகக் கூறிய கருத்தையும் தகவல்களையும் ஆணைக்குழுவுக்கு ரஞ்ஜன் ராமநாயக்க ஆதரமாக சமர்ப்பித்தார்.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவுக்கு மேற்குறிப்பிட்ட 82 மில்லியன் ரூபாவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இருந்தபோதும் அவற்றை மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புசெய்தமை மோசடி என்றுதெரிவித்த ரஞ்ஜன் ராமநாயக்க, 82 மில்லியன் ரூபாவும் பின்னர் சுனாமி பேரழிவின் எந்தப் பகுதிக்கு எதற் காக செலவுசெய்யப்பட்டது என்பதையும் விசாரணை செய்யவேண்டுமென முறைப்பாட்டில் கோரியிருப்பதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கு எந்த விதத்திலும் உரிமை இல்லை. எனினும் அவ்வாறு அவர் வைப்பு செய்வதற்காக காரணம் என்ன என்பதையும் விரிவாக விசாரணைக்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குச் சென்ற பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, முறைப்பாட்டை கையளித்த பின், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான பணம் கிடைத்தது. இவற்றில் 82 மில்லியன் ரூபா ஹெல்பிங் ஹம்பாந் தோட்டை என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தெரியப்படுத்தாமல் 82 மில்லியன் ரூபாவையும் தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கபீர் ஹாசிம் இரகசியப் பொலிஸாருக்கு முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்தப் பணம் சட்டரீதியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி முறைப்பாடு செய்த கபீர் ஹாசிமிடமிருந்து விசாரணைகள் நடத்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமிருந்தும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அறவிடப்பட்டது.
அடிப்படை மனித உரிமைகள் மனு வொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தே இந்த பணத்தை அறவிட்டுக் கொண்டார் என்றும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கணக்கில் வைக்கப்பட்டிருந்த பணத்தை வேறு கணக்கொன்றுக்கு மாற்றி பின்னர் ராஜபக்ஷ ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் வேறு தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad