புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

அம்பலத்திற்கு வந்தது டலஸின் ஊழல்: விரைவில் கைதாகும் சாத்தியம்
டலஸ் அழகபெரும போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து நிதி மோசடி பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மோசடிகள் பற்றி தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
இந்த நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்துரு மித்துரு செயற்திட்டத்தின் கீழ் வடபகுதி ரயில் பாதைகளை புனரமைக்கும் பணிகளை டலஸ் அழகபெரும விலை மனுவை கோராமல் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளார்.
இந்த செயற்திட்டத்திற்கான வரவு செலவுகள் போக்குவரத்து அமைச்சு அல்லது ரயில் திணைக்களத்தின் கணக்குகளில் பதியப்படவில்லை.
இதனால், இந்த திட்டத்திற்கான செலவுகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்து கொள்வது போக்குவரத்து மற்றும் ரயில் திணைக்கள அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் சாட்சியமளித்த அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சராக இருந்த டலஸ் அழகபெருமவின் ஆலோசனைக்கமைய தாம் பணியாற்றியதாக கூறியுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள சாட்சியங்களின்படி போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.
இதனையடுத்து டலஸ் அழகபெருமவும் கைது செய்யப்படலாம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக டலஸ் அழகபெரும உட்பட 26 பேரை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய நேற்று அழைப்பாணை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad