புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

வடகிழக்கில் மூவாயிரம் போராளிகள் அவயகங்களை இழந்து வாழ்கின்றனர் -



வடகிழக்கில் மூவாயிரம் போராளிகள் அவயகங்களை இழந்து வாழ்கின்றனர் - 
வடக்கு கிழக்கில் மூவாயிரம்
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தமது அவயகங்களை இழந்து வாழ்வதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
மூவயிரத்து 402பேர் உடல் உறுப்புக்களை இழந்த நிலையில் வாழ்வதாக தெரிவித்துள்ள அவர் 900பேர் நிரந்தரமாக பராமரிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த 900பேர் மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கி உடல் உறுப்புக்களை இழந்தவர்களும் பார்வை திறன் அற்றவர்களும் முழுமையாக கேட்கும் திறனை இழந்தவர்களும் முழமையாக டஉல் செற்பாட்டை இழந்தவர்களும் அடங்குவதாக அவர் கூறுகிறார்.
இவர்கள் நிரதந்தரமாக பராமரிக்கப்பட வேண்டியவர்கள் என தெரிவித்துள்ள ஆணையாளர் இவர்களை வீடுகளில் வைத்து பராமரிக்கும் வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போரின் நெருக்கமான உறவுகளை இழந்த முன்னாள் போராளிகளை கவனிப்பதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர் முன்னாள் போராளிகளுக்கான கவனிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மோசமாக பாதிக்கப்பட்ட இந்த முனன்னாள் போராளிகளின் பிரச்சினை பெரும் சமூகப் பிரச்சினையாக எதிர்காலத்தில் ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர் இவர்களை தீவிரவாதிகளாக பார்க்பாது அவர்களின் எதிர்காலத்தை உரிய வகையில் கையாள வேண்டும் என்றும் கூறினார்.
விரைவில் இலங்கை இராணுவத்தினருக்கு அமைக்கப்பட்ட கவனிப்பு நிலையங்கள் போல முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கான கவனிப்பு நிலையங்கள் உருவாக்கப்படும் என்று சுட்டிக்கட்டிய புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக அவை கிளிநொச்சி அல்லது யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டும் என்று மேலும் தெரிவித்தார்.

ad

ad