புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

உதயங்க வீரதுங்கவை கைது செய்ய மேற்குலக நாடுகளை உதவிக்கு அழைக்கிறது அரசு


முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலனாய்வு அமைப்புக்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் கைது நடவடிக்கைக்கு உதவி செய்யுமாறு அரசாங்கம் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளதா என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்க இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் இது குறித்து அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளுமாறு தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
யுக்ரேன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுத விற்பனையில் ஈடுப்பட்டார் என உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே மேற்குலக நாடுகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான அவரை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளதுடன், அவர் குறித்து இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து தகவல்களை கோரவில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை அவர் தொடர்பில் சர்வதேச தேடுதல் வேட்டையொன்றை நடத்துவதற்கு இலங்கையில் உரிய வளங்கள் இல்லை எனவும், மேற்குலக நாடுகளினால் அவரை இலகுவில் கண்டுபிடிக்க முடியும் எனவும் குறித்த விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமல்லாது அவர் உக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியவர் என்பதினால் அவர் தற்போது மறைந்திருக்கும் இடம் குறித்து மேற்கத்தேய நாடுகளின் புலனாய்வு பிரிவினர் அறிந்திருக்க கூடும் எனவும் அவ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ad

ad