புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பம்


 புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்று கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 
வழமையாக சிறையிலுள்ள ஒருவரைப் பார்வையிட ஒரு நாளைக்கு ஒரு தடவை 3 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். விளக்கமறியல் கைதிகளை ஒவ்வொரு நாளும் சென்று பார்வையிட முடியும். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை மாதத்தில் ஒரு தடவையே பார்வையிட முடியும். 
 
ஆனால் புதுவருட தினமான இன்று சிறைச்சாலையில் உள்ளவர்களைப் பார்வையிட 3 பேர் என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைத் தரப்புத் தெரிவித்தது.
 
வழமைபோன்று முற்பகல் 9 மணி தொடக்கம் மதியம் 12.30 வரையும் பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரையும் கைதிகளைப் பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad