புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

ஸ்ரீ.சு.கவிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர
மோசடி ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ஆகியோருக்கே இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.
இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதனால், அவருக்கு பதிலாக அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதோடு, அதாவது நிரூபமா ராஜபக்சவுக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.
அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்காமலும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைவதற்கு முன்னர் எதிர்கட்சிக்கு செல்லவிருந்ததாகவும் அறியமுடிந்தது.
எப்படியிருப்பினும் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்குவதனை தடுக்க வேண்டுமென ஹம்பாந்தோட்டை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad