புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு எச்சரித்தேன்! மஹிந்


இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது பசில் ராஜபக்சவை சிறையில் வைத்துள்ளனர். எனது செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சமூர்த்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தான் அரசாங்கத்தின் நல்லாட்சி.
இலங்கைக்கு வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு கூறினேன். மஹிந்த அண்ணா நான் குற்றம் செய்யவில்லை அதனால் நான் வருவேன் என அவர் கூறினார் பசிலுக்கு அமெரிக்காவில் பதுங்கியிருந்திருக்க முடியும்.
தியானத்திற்கு பயன்படுத்தப்படும் சில் ஆடைகளை விநியோகம் செய்வது தற்போது குற்றமாகியுள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் சில் எடுப்பதுவும் தவறாகிவிடும்.
அஸ்கிரி பீடாதிபதியின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு நடைபெற்றது என்பதனை நான் பார்த்தேன். ரோஹனவன்ச நாயக்கத் தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றதனையும் நான் பார்த்தேன்.
நான் ஆட்சியில் இருந்திருந்தால் இறுதிக் கிரியைகளை வெகு சிறப்பாக செய்திருப்பேன்.
மத்திய வங்கியில் 41 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. காலி, கொழும்பு அதிவேகப் பாதைக்கு ஒதுக்கப்பட்ட தொகையிலும் ஒன்பது மடங்குக்கு மேலான பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து யாரும் பேசுவதில்லை என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad