புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ நாளை மாத்தறையில் மோதல்


இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்குமிடை யிலான கிரிக்கெட் போட்டி நாளை மாத்தறை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ஏ அணியில் தேசிய அணி வீரர்கள் அதிகள வில் இடம்பெற்றுள்ளதால் எமது அணிக்கு அதிக பலம் இருப்பதாக இலங்கை ஏ அணியின் தலைவர் அ'hன் பிரியன்ஜன் தெரிவித்தார்.
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ
அணிக்குமிடை யிலான போட்டி தொடர்பாக ஊடகவியளர்களுக்கு விளக் கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.
அவர் தொடர்து கருத்து தெரிவிக்கையில்:
எமது அணியில் பல சிரேஷ்ட வீரர்கள் உள்ளனர் அவர்கள் மூலம் வெற்றியை பெற்றுக்கொடுக்க உள் ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை நல்ல பந்துவீச்சாளர்களும் எமது அணியில் உள்ளமை விசேட அம்சமாகும்.
இளம் வீரர்களைக்கொண்ட இந்த அணியில் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றியை பெற்றுக்கொடுத் தால் வருங்காலத்தில் தேசிய அணியில் இடம்பிடிப்ப தற்கு வாய்;ப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜ_ன் மாதம் இலங்கைக்கு சுற்றுலா வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற் கான வாய்ப்பாகவும் இப்போட்டி அமையவுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த இலங்கை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் ரேமேஷ் களுவித்தாரன :
இலங்கை தேசிய அணியில் இருந்து உலக கிண்ண போட்டியின் பின்பு ஓய்வு பெற்ற நிலையயில் இந்த போட்டியை இளம் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டால் தேசிய அணியில் இடம்பிடித்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இந்த அணியில் உள்ள நல்ல வீரர்கள் உள்ளனர் அவர்களை சரியான பாதைக்கு இட்டுச்சென்று தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வுள்ளேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை பாகிஸ்தான் ஏ அணியின் பயிற்றுவிப் பாளராக அவ்அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முஹம்மட் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஏ அணியின் தலைவராக பவாட் அலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ad

ad