புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் டக்ளஸ் மீண்டும்; வலியுறுத்து


தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள்
ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம்; தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்;துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் தலைமைகளால் தவறாக வழிநடாத்தப்பட்ட நிலையில் எமது இளைஞர் யுவதிகள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அவற்றில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சில தமிழ் அரசியல்வாதிகள் முறையிட்டு வருகின்றனர். இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அதுமட்டுமல்லாது, பிரதமர் ரணில் விககிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது, யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நேரடியாகவும் கேட்டிருந்தோம். அப்போது அப்படியேதும் இரகசிய முகாம்கள் இல்;லையென்ற பதிலே எமக்குக் கிடைத்தது. மேலும் இவ் விடயம் தொடர்பில் நாம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது இதற்கு பதில் அளிப்பதற்கு இரு வாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.
தடுத்துவைக்கப்பட்டுள்ளோரது விபரங்கள் சரிவரத் தெரியாத காரணத்தினால், அவர்களைப் பிரிந்துள்ள உறவினர்கள் பெரும் துயரங்களையும,; கஸ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். அதேநேரம், தங்களது உறவுகள் காணாமற்போயுள்ள நிலையில் அவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடியலையும் எமது உறவுகளும் மேற்படி விபரங்களை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.
எனது தம்பி உட்பட எனது கட்சித் தோழர்கள் பலரும் காணாமற்போயுள்ளனர். இவர்களைப் பற்றிய விபரங்களை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
எனவே தடுத்துவைக்கப்பட்டுளோரின் விபரங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு பெரிதும் பயனாக அமையும். இதனை அவதானத்தில்கொண்டு அரசாங்கம் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரது விபரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad