புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

அமெரிக்காவின் தேவைக்காக ஐ.தே.க.வின் ஆட்சியை உருவாக்கும் சதி முயற்சியில் மைத்திரி

அமெ­ரிக்­காவின் தேவைக்­காக நாட்டில் ஐ.தே.கட்சி ஆட்­சியை உரு­வாக்கும் சதித்­திட்டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெடுக்­கின்றார். இதனை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் மே தினத்தில் ஒன்­றி­ணைவோம் என கூட்டு தொழிற்­சங்க சம்­மே­ளனம் அறைகூவல் விடுத் துள்ளது.
அத்துடன் இலங்­கைக்­கான ஜோன் ­கெ­ரியின் விஜ­யத்தை கடு­மை­யாக எதிர்ப்­ப­தா­கவும் தெரி­வித்­தது. நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள அபே­ராம விகா­ரையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்டு தொழிற்­சங்க சம்­மே­ள­னத்தின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் உரை­யாற்­றிய மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் எம்.பி.யுமான தினேஷ் குண­வர்த்­தன, எதிர்க்கட்­சி­யி­னரை விரட்டி விரட்டி பழி­வாங்கும் இந்த அர­சாங்­கத்­தினை வீட்­டுக்கு அனுப்பும் எமது போராட்டம் எதிர்­வரும் மே தினத்தில் ஆரம்­ப­மாகும் என்றும் கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
எமது ஊர்­வ­லத்­திலும் கூட்­டத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த அனைத்து கட்­சி­யி­னரும் கலந்து கொள்ள வேண்­டு­மென பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றோம். மேதி­னத்­தோடு எமது புதிய அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்து இந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­புவோம். எமது தலை­மையில் புதிய ஆட்­சியை உரு­வாக்­குவோம். கூட்டு மே தினத்தில் அர­சியல் கட்­சிகள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் என 200 க்கும் மேற்­பட்டோர் எமது மேதி­னத்தில் கலந்து கொள்­கின்­றனர்.
இம் மே தினத்தில் கலந்து கொள்­ளு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­க்ஷ­விற்கும் இக்­கூட்­டத்தில் பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றோம். அத்­தோடு அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அழைப்­பையும் வழங்­க­வுள்ளோம்.
முன்னாள் ஜனா­தி­பதி தனது வரவு செலவு திட்­டத்தில் முன்­மொ­ழிந்த சம்­பள உயர்வு அரச ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.
இந்த அரசின் 100 நாட்கள் வேலைத்­திட்­டத்தில் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை.
மாறாக எதிர்க்­கட்­சி­யி­னரை துரத்தி துரத்தி வேட்­டை­யாடி பழி­வாங்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
எனவே எதிர்­வரும் மே தினத்தை மஹிந்த ராஜ­பக்­க்ஷ­வுடன் ஒன்­றி­ணைந்து அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் போராட்­டத்தை ஆரம்­பிப்போம் என்றும் தினேஷ் குண­வர்­தன எம்.பி. தெரி­வித்தார்.
பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண எம்.பி.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெ ளியிட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண குறிப்பிடுகையில்
இலங்­கையில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் தேவைக்­காக ஐ.தே. கட்­சியின் அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்தும் சதித்­திட்­டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுத்து வரு­கிறார். எனவே ஐ.தே.கட்சி ஆட்­சியை கொண்டு வரும் முயற்­சியை தோல்­வி­யடைச் செய்ய உழைக்கும் வர்க்­கத்­தினர் இணைய வேண்டும். ஜ.தே. கட்சி ஆட்சி நாட்டில் உரு­வானால் முற்­போக்கு சக்­திகள் மட்­டு­மல்ல உழைக்கும் வர்க்­கத்­தி­னரும் அடக்கு முறைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வார்கள்.
பொதுத்­தேர்­தலை நடத்தி ஐ.தே. கட்சி ஆட்­சியை ஏற்­ப­டுத்­தவே அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி இலங்கை வரு­கிறார்.
ஜோன் கெரி இலங்கை வரு­வது ஜனா­தி­ப­திக்கு தெரி­யாதாம். ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஜோன் கெரி வரு­வது தெரியும்.இதி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் சதி தெளி­வா­கின்­றது.ஜோன் கெரி இலங்கை வரு­வதை கடு­மை­யாக எதிர்க்­கின்றோம் என்றார்.
வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. இந்தச் சந்திப்பில் ஜனநாயக இடது சாரி முன்னிணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகையில் மைத்­திரி –- ரணில் –சந்­தி­ரிக்­காவின் கூட்டு சதியை முறி­ய­டித்து தேசப்­பற்­றுள்ள அர­சாங்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப மே தினத்தில் அனை­வரும் ஒன்­றி­ணைவோம்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எம்மை மண்­டி­யிடச் செய்து மே தினத்தை கொண்­டாட முயற்­சித்தார். ஆனால் அனைத்­தையும் முறி­ய­டித்து இடது சாரி­க­ளான நாம் இணைந்­துள்ளோம். தேசிய அரசாங்கம் எமக்கு தேவையில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டரசாங்கத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதி பியசிறி விஜேயநாயக உட்பட பல தொழிற்சங்கங்களினதும் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

ad

ad