புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

ஓராள் நாடக ஆற்றுகையில் \\\'தாகம்\\\' முதலிடம்


யாழ். செயற்திறன் அரங்க இயக்கமும் யாழ்ப்பாணம் மாநகரசபையும் இணைந்து நடாத்திய ஓராள் நாடக ஆற்றுகை நிகழ்வின்
இறுதிப்போட்டி நேற்று இரவு இடம்பெற்றது.
 
இந்நாடகப் போட்டியில் கச்சாய் சாவகச்சேரியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சுமணனின் தாகம் எனும் நாடகம் முதலாமிடத்திற்கான சிறந்த ஆற்றுகையாகத் தெரிவு செய்யப்பட்டது.
 
இரண்டாமிடத்தினை ஒரு கூத்தனின் குறிப்பேடு எனும் ஆற்றுகைக்காக குருநகரைச் சேர்ந்த சானிஸ் விஜரெட்ணம் ஜோன் கலிஸ்ராசும் மூன்றாமிடத்தினை ஊடறுப்பு எனும் ஆற்றுகைக்காக அல்லைப்பிட்டியைச் சேர்ந்த செல்வி ஸ்ரனிஸ்லாஸ் நிதர்ஸனாவும் பெற்றுக்கொண்டனர்.
 
மேலும் இறுதி போட்டியில் 12 நாடகங்கள்  அரங்கேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

ad

ad