புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2015

துமிந்த சில்வா எம்.பி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை


 

பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர
படுகொலை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த துமிந்த சில்வா எம். பிக்கு நேற்று கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா எம். பியின் கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பிணையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ அமைப்பாளருமான பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மாவட்ட எம். பி துமிந்த சில்வா உட்பட 13 பேர் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப் பட்டிருந்தனர். இவர்கள் அத்தனை பேரும் கடும் நிபந்தனையுடன் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டனர். துமிந்தசில்வா எம். பி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் அவருடைய கடவுச்சீட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே வழங்கப்பட்ட பிணை அதிகரிப்பின் பிரகாரம் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையாளர்கள் இருவரை முன்னிலைப்படுத்துமாறு அதிகரிக்கப்பட்ட பிணையில் கூறப்பட் டுள்ளது. அத்துடன் மாதம் ஒருமுறை பொலிஸில் ஆஜராகுமாறும் நீதவானால் உத்தரவிடப்பட்டது.
இந்தப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 13 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் 11 சந்தேகநபர்களே நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். துமிந்தசில்வா எம். பி உட்பட 13 பேருக்கும் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறினால் சந்தேகநபர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்படுவர் என்று மேல்நீதிமன்ற நீதிபதி தேவிகா.டி.லிவேரா தென்னக்கோன் எச்சரிக்கை விடுத்தார்.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது கொலன்னாவையில்வைத்து பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்ததாக துமிந்த சில்வா உட்பட சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. .

ad

ad