புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2015

ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 8வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய 12வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்திவ் படேல் ஓட்டங்களின்றியும், சிம்மன்ஸ் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மும்பை அணி 3.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 12 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தவித்தது. தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் ஷர்மா 50 ஓட்டங்களும், ஹர்பஜன் சிங் 24 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பொல்லார்டு அரைசதம் கடந்து 64 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை சார்பில் ஆசிஸ் நெக்ரா 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான டுவைன் ஸ்மித் அரைசதம் கடந்து 62 ஓட்டங்களும், பிரெண்டன் மெக்கல்லம் 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய பிளசிஸ் 11 ஓட்டங்களிலும், அணித்தலைவர் டோனி 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
16.4 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் ரெய்னா 43 ஓட்டங்களும், பிராவோ 13 ஓட்டங்களும் எடுத்தனர்.

ad

ad