புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

சரணடைந்து காணாமல் போனோர் நிலை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச முடிவு! விபரங்களை அனுப்பக் கோருகிறார் அனந்தி.


இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி அவற்றை விரைவில்
ஜனாதிபதியிடம் நேரடியாகக் கையளிக்கவுள்ளதாக வடமகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
எனவே இறுதிப் போரில் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து, அல்லது சரணடைந்து அதன் பின் இன்றுவரை காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள், அவர்கள் தொடர்பான ஆவணங்களை அவர்களது உறவினர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
அடுத்த வாரமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளேன். இதன்போது இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் நேரடியாக சரணடைந்தவர்கள் தொடர்பாகவும், காணமல் போனவர்கள் தொடர்பாகவும் பேசத் தீர்மானித்துள்ளேன் என அவர் கூறினார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் போயுள்ளவர்கள் எவ்வாறு இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்? எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள்? எந்த வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்? இறுதியாக அவர்களை கண்ட இடம் மற்றும் நேரம் என்பவற்றினை தெளிவுபடுத்தும் தகவல் கடிதத்துடன், காணாமல் போனவருடைய புகைப்படம், சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டமைக்காக ஆதாரம் என்பவற்றினை உள்ளடக்கிய முழுமையான ஆவணத்தினை காணாமல் போனவர்களுடைய உறவுகள் எனக்கு அனுப்பி வைக்கலாம்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை பேரவைச் செயலகம், கைதடி என்ற முகவரிக்கோ அல்லது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடக்கம்பரை, சுழிபுரம் என்ற விலாசத்திற்கு தகவல்களை அனுப்பிவைக்க முடியும்.
இவ்வாறு சேகரிக்கும் ஆவணங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் இவற்றுடன் காணாமல் போனவர்களுடைய தகவல்களையும் அனுப்பி வைத்தால் அது சம்பந்தமான நடவடிக்கை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

ad

ad