புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

மஹிந்தவின் சகாக்கள் டக்ளஸ், சந்திரகுமார் பச்சோந்திகள்!


இந்த மண்ணை, இந்த நாட்டைக் கொள்ளையடித்த, சூறையாடிய மஹிந்த உட்பட அவரது பரிவாரங்களை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் உட்பட அனைவரும் இன்று இந்தப் பக்கம் வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவை ஆதரிக்கிறார்களாம். 
 
அவர்களைப் போன்றவர்கள் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரான நாங்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி ஜெயபுரம் அ.த.க பாடசாலையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் நிதிப் பங்கீட்டில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கான உதவி வழங்கும் திட்டத்தில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ராஜபக்ச­வும் அவரது ஆள்களும் இந்த மண்ணை, இந்த நாட்டை எவ்வளவு சூறையாடினார்கள், கொள்ளை அடித்தார்கள் என்பது பற்றிய விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பத்திரிகைகளிலே இவை பக்கம் பக்கமாக எழுதப்படுகின்றன. 
 
இவர்களைத் தான் டக்ளஸ், சந்திரகுமார் உட்பட எல்லோரும் ஆதரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்றைக்கு இந்தப் பக்கத்திலே வந்திருக்கின்றார்கள்.
 
அங்கே அங்கஜன் என்பவர் யாழ்ப்பாணத்திலே ராஜபக்ஸவுக்காக வேலை செய்தவர். தேர்தல் முடிந்தவுடன் மிகப் பெரிய அலங்காரமான மஹிந்தவின் படத்தை அகற்றி மைத்திரிபாலவின் படத்தைப் போட்டுக்கொண்டார். அதைப்போல் நாங்கள் இல்லை.
 
அப்படிப்பட்ட அரசியலில் ஈடுபடுபவர்கள் நாங்கள் அல்ல. அபடிப்பட்டவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிக்கு வருவதற்காகப் பேச்சு நடத்துகின்றார்கள். எங்களைப் பொறுத்தவரை இத்தனை மக்கள் திடசங்கற்ப்பமாக வாக்களித்ததைக் கொண்டு அமைச்சுப் பதவி கேட்பது எதிர்பாராத விடயம். எங்களுடைய மண் விடுவிக்கப்பட்டு எங்களுடைய மக்கள் எங்கள் மண்ணை ஆளவேண்டும், வாழவேண்டும். 
 
இந்த நாட்டினுடைய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று புதிய அரசை வற்புறுத்தி கொண்டிருக்கின்றோம். இவை யெல்லாம் அமைச்சுப் பதவிகளுக்காக அல்ல என்றார்.

ad

ad