புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2015

அப்பீல் வழக்கிலும் ஜெயலலிதா புகுந்து விளையாடியுள்ளார்: நீதிபதி மதன் பி. லோகூர்



ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இம்மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளான பானுமதி மற்றும் மதன் பி. லோகூர் இடையே முரண்பாடு ஏற்பட்டது. 

’’உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எப்படி பதவியை தக்க வைத்துக்கொள்ள அந்த வழக்கின் விசாரணையை கெடுப்பார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.  கடந்த 18 ஆண்டுகாலமாக இந்த வழக்கை இழுத்தடித்ததோடு இல்லாமல்,  இந்த வழக்கில் தீர்ப்பு வந்தபிறகு, அதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கிலும் ஜெயலலிதா புகுந்து விளையாடியுள்ளார். 

 பவானிசிங்கை தமிழக அரசே நியமித்து குற்றவாளிக்கு எதிரான அரசுதரப்பு வாதத்தை காயப்படுத்தியது. இந்த வழக்கு நடைபெற்ற விதமே எப்படி ஒரு வழக்கை நடத்தக்கூடாதோ, அப்படி இந்த வழக்கு நடைபெற்றுள்ளது.  எனவே, இந்த வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததை தவறு என்று கூறுகிறேன்.  இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.  இந்த வழக்கின் மனுதாரராக அன்பழகனை ஏற்கவும் முடியாது’’ என்று கூறினார்.  

அதே நேரத்தில் நீதிபதி பானுமதி,   ‘’அன்பழகனை மனுதாரராக ஏற்கிறேன்.  பவானிசிங் நியமித்ததில் எந்த தவறும் இல்லை. பவானிசிங்கை நியமித்த உத்தரவை கர்நாடக அரசு ரத்து செய்யவில்லை.  எனவே,  பவானிசிங் தொடர்வதில் தவறில்லை’’ என கூறினார்.  

இரு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட கருத்தால், இந்த மனு மூன்று பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

ad

ad